உலகிலேயே விலையுயர்ந்த பழம் இதுதான் ..1 கிலோ ரூ. 20 ஆயிரமாம் - எது தெரியுமா?
இந்த தர்பூசணி உலகின் அனைத்து தர்பூசணிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
விலையுயர்ந்த பழம்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினமும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வெகு குறைவானவர்களே உள்ளனர்.நமது உடலில் 80% நீர் உள்ளது. அது போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது.
அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான். பழங்களில் நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பி உள்ளது. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பி உள்ளது.இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும்.
அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, உள்ளிட்ட பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம். அதே சமயம் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான்.
எது தெரியுமா?
பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க பழங்களில் உலகிலேயே விலை உயர்ந்த பழம் உள்ளது. அதி குறித்து விரிவாகப் பார்க்கலாம். யூபரி முலாம்பழம் அல்லது யூபரி தர்பூசணி என்று அழைக்கப்படும் தர்பூசணியின் விலை கிட்டத்தட்டத் தங்கத்தின் விலைக்குச் சமம்.
இந்த தர்பூசணி ஜப்பானில் உள்ள ஒரு பெரிய தீவான ஹொக்கைடோவில் விளைவிக்கப்படுகிறது. இந்த தர்பூசணி உலகின் அனைத்து தர்பூசணிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிலோ யூபாரி தர்பூசணியின் விலை இந்திய ரூபாயில் சுமார் 20,000 ரூபாய் ஆகும்.
உலகில் இவ்வளவு விலை உயர்ந்த பழம் வேறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு தர்பூசணியின் சராசரி எடை 2.5 முதல் 3 கிலோ வரை இருப்பதால் இது தங்கத்துடன் ஒப்பிடப்படுகிறது