தண்ணீரோடு தங்கம் வழியும் அதிசய ஆறு - அதுவும் இந்தியாவில்! எங்கு உள்ளது தெரியுமா?
இந்தியாவில் தங்கம் வழிந்தோடும் ஆறு பற்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதிசய ஆறு
பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த நாடு இந்தியா. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம். ராஞ்சியில் உருவாகி, மேற்கு வங்கம், ஒடிசா வழியாக பாய்ந்தோடும் சுவர்ணரேகா ஆறு. சுமார் 474 கி.மீ. நீளம் கொண்ட இந்த நதியில் வழிந்தோடும் தண்ணீரோடு, தங்கமும் வருவது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.
இந்த ஆற்றில் வரும் தங்கத் துகள்களை பிரித்தெடுத்து, அதை வைத்து வாழ்க்கை நடத்துவது தான் அப்பகுதி மக்களின் வழக்கமாகும். குறிப்பாக இந்த ஆறுதான், அப்பகுதி மக்களின் முக்கியமான வாழ்வாதாரம்.
காலையில் சூரியன் உதயம் தொடங்கி மலையில் சூரியன் மறையும் வரை ஆற்றில் வரும் மணலை சலித்து, அதிலிருந்து தங்கத் துகள்களை பிரிப்பதுதான் இந்த மக்களின் அன்றாட வேலையாகும். இந்த ஆற்றின் தண்ணீரில் தங்கம் எப்படி வந்தது? எங்கிருந்து தங்கம் வருகிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எங்கு உள்ளது?
ஆனால், பாறைகளில் தங்கியிருக்கும் தன்கண்கள் தண்ணீர் வேகமாக வரும்போது நடக்கும் உராய்வின் மூலம் தங்கத் துகள்கள் உருவாகி, ஆற்றில் அடித்து வரப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இந்த தகவல்கள் உண்மை தான் என யாரும் நிரூபிக்கவில்லை.
இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய அரசு, ஆறு உருவாகும் பகுதி தொடங்கி அது பாய்ந்தோடும் பல பகுதிகள் வரை எங்காவது தங்கச் சுரங்கம் இருக்கிறதா? என்று கண்டறிய இரண்டு வெவ்வேறு அமைப்புகள் தேடினார்கள். ஆனால் தங்கத்துகள் வருவதற்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, அங்கு வசிக்கும் மக்கள் மழைக்காலம் தவிர மற்ற நாட்களில் ஆற்று மணலை சலித்து தங்கத் துகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கிடைக்கக்கூடிய தங்கத் துகள்களின் அளவு ஒரு அரிசி அல்லது தானியத்தை விட மிகவும் சிறியதாக இருக்குமாம்.மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுமக்கள் யாரும் அதை கண்டுகொள்வதில்லை எனவும் சொல்லப்படுகிறது.