பாடாய் படுத்திய.. கொரோனாவுக்கென்றே ஒரு தனி தீம் பார்க் இருக்கு.. எங்கு தெரியுமா?
கொரோனாவுக்கென்றே ஒரு தனி தீம் பார்க் அமைக்கப்பட்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தீம் பார்க்
உலகம் முழுவதையும் முடக்கி, கடுமையாக பாதித்த ஒரு தொற்றுதான் கொரோனா. அப்படி இரண்டு ஆண்டுகளாக மக்காளை அச்சுறுத்திய கோகிட் - 19க்கு ஒரு தீம் பார்க்கே உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாம், அண்மையில் லண்டனைச் சேர்ந்த எலா ரிபக் என்ற 29 வயது சுற்றுலா பயணி, வியட்நாம் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு அவர் சென்ற தீம் பார்க் ஒன்றை வீடியோவாக இணையத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அது வைரலாக பரவி வருகிறது. அதாவது, தெற்கு வியட்நாமில் உள்ள Tuyen Lam ஏரி தேசிய சுற்றுலா மையத்தில் இந்த கொரோனா தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும் தொற்றாக கொரோனா பரவிய சமயத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை பிரதிபலிக்கும் வகையிலும் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை விவரிக்கும் வகையிலும் இந்த தீம் பார்க் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எங்கு தெரியுமா?
குறிப்பாக மரம் ஒன்றில் வடிவமைக்கப்பட்டுள்ள கடிகாரத்தில் எண்களுக்கு பதிலாக கொரோனா வில் இருந்து தற்காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தன.
இதே போல் கொடூர கொரோனாவை கொஞ்சம் இம்சித்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையிலான இருக்கைகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. பெரிய சிரஞ்சி மூலம் கொரோனாகளுக்கு ஊசி குத்துவது போன்றும்
சிறையில் கொரோனாவை அடைப்பது போன்றதுமான உருவ அமைப்புகளும் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இந்த தீம் பார்க்கின் வீடியோ வைரலாகி வருகிறது.