நாகசைதன்யாவிடம் நான் கேட்கவே மாட்டேன் - சமந்தா அதிரடி பதில் என்ன தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சம் கேட்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வாழக்கையும் மகிழ்ச்சியுடன் சென்ற நிலையில் திடீரென் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரே மாதிரியான பதிவை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.
இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களையும்,திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரின் பிரிவுக்கு காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.
பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா மிகவும் ஆபாசமாக நடித்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது.
சமந்தாவின் சொத்துமதிப்பு 84 கோடி எனவும் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவிற்கு ஹைதராபாத்தில் பல வீடுகள்,நிலங்கள் இருந்தாலும் தற்போது அவர் மும்பையில் ஒரு வீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமந்தா 2 பிஎம்டபுள்யூ கார்,ஒரு ஜாக்குவார் காரும் வைத்துள்ளார்.இதுமட்டுமின்றி தனது சம்பளத்தையும் கணிகசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தனது முன்னாள் கணவரை காட்டிலும் தன்னிடம் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதால் தான் ஜீவனாம்சம் கேட்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.