Water bottles-களில் இருக்கும் வண்ண மூடிகள்..அர்த்தம் என்ன தெரியுமா?இதை பாருங்க!
India
Water
World
By Vidhya Senthil
தண்ணீர் பாட்டில்களின் வெவ்வேறு வண்ண மூடிகளின் அர்த்தம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர் பாட்டில்
இந்தியாவில் 1970களில் பாட்டில் தண்ணீர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு இதன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. பெரும்பாலான மக்கள் தண்ணீரை எடுத்து வருவதைக் கௌரவ குறைச்சலாக எண்ணிக்கொண்டு அவற்றிற்கு மாறாகத் தண்ணீர் தேவைப்படும் பொழுது பாட்டில்களையும்,
பாக்கெட்டுகளையும் வாங்கி தண்ணீரை பருகி விட்டு உடனே தூக்கி எறிந்து விடுகின்றனர். அப்படி வாங்கப்படும் தண்ணீர் பாட்டில்களில் வெவ்வேறு வண்ணங்களில் மூடிகள் இருக்கும் இதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்குத் தெரியாது? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அர்த்தம்
- தண்ணீர் பாட்டில்களில் பச்சை நிற மூடி இருந்தால் நீரூற்று நீர் அல்லது குறிப்பிட்ட இயற்கை நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் நீர் என்று அர்த்தம்.
- வெள்ளை நிற மூடி இருந்தால் பொதுவாக இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட அல்லது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் என்று அர்த்தம்.
- நீல நிற மூடி இருந்தால், அந்த தண்ணீர் மினரல் வாட்டர் என்றும் அர்த்தமாம்.
- கருப்பு நிறத்திலிருந்தால் தண்ணீர் காரத்தன்மை கொண்டது. சாதாரண தண்ணீர் பாட்டில்களை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- சிவப்பு நிற மூடி வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் கலந்துள்ளன என்று அர்த்தம்.சிவப்பு நிறம் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடியது.