ஹனிமூன் என்பதற்கு உண்மையான அர்த்தம் இதுதான் - இது தெரியாம போச்சே!
ஹனிமூன் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹனிமூன்
திருமணமான புது தம்பதிகள் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்கு சென்று இருவரையும் புரிந்து கொள்ளகூடிய இடமாக ஹனிமூன் உள்ளது. அப்படிப்பட்ட ஹனிமூன் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஹனிமூனின் முழு வார்த்தை ஆக்ஸ் ஃபோர்ட் டிக்ஷரி ஹனிமூன் ஆகும்.
இவை திருமணமான முதல் மாதத்தை குறிக்கிறது. ஏனெனில் அந்த முதல் மாதம்தான் சண்டைகள் ஏதுமின்றி பரஸ்பர புரிதல்களோடு, அன்யோனியமாக இருக்கும் காலம். குறிப்பாக வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஒரு மாதம் விடுமுறையில் இருப்பார்கள்.
அந்த நேரத்தில் அலுவலக வேலைகள் எதையும் செய்ய மாட்டார்கள்.அதே சமயம் அலுவலகமும் அவர்களை தொடர்புகொள்ளாது. ஹனிமூன் என்னும் வார்த்தையை முதன்முதலில் ஜெர்மனியில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கலாச்சாரம் பாபிலோனிய மக்களையே சேரும்.
அர்த்தம்
அதாவது 5-ஆம் நூற்றாண்டில் பாபிலோனிய மக்கள் திருமணத்தின்போது மணமகளின் தந்தை பெண்ணின் மகிழ்ச்சிக்காக மீட் (mead) என்னும் ஒருவகை பானம் கொடுப்பார்கள். இந்த பானத்தை பதப்படுத்தி மகளுக்காக வழங்குவர். அந்த பானத்தை திருமணமான ஒரு மாதம் முழுவதும் கொடுப்பது வழக்கம்.
அதுமட்டுமன்றி நிலவின் சுழற்சி முறையை பயன்படுத்தி பாபிலோனர்களின் காலண்டர் கணக்கிட்டனர் .அதை வைத்துதான் நாள், காலத்தை குறிப்பிடுகிறார்கள். அப்படி கணக்கு வைத்து கொடுக்கும் மாதத்தைதான் honey month என்று அழைப்பார்கள். இது நாளடைவில் மறுவி ஹனிமூன் என்றாகிவிட்டது.