இந்த நோய் இருக்கிறவங்க மட்டன் சாப்பிடக்கூடாது.. விஷயம் இதுதான் - தெரிஞ்சிகோங்க!
மட்டன் அதிகமாகச் சாப்பிடுவது கொடிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிக உள்ளது.
மட்டன்
நம்மில் பெரும்பாலானவர்கள் அசைவ பிரியர் இருப்பர். சிலர் வாரத்திற்கு விலை அதிகம் என்பதால் ஒரு முறை மட்டன் சாப்பிடுவார்கள் அல்லது வாரத்திற்கு 3 நாட்கள் சாப்பிடுவார்கள். மற்றும் சிலர் தினசரி சாப்பிடுவார்கள். மட்டன் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்.
ஆனால் இவை அடிக்கடி சாப்பிடுவதால் கொடிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிக உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வாரத்திற்கு இரண்டு 2 அல்லது 3 முறை மட்டனைச் சாப்பிடுபவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
தினமும் மட்டன் சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. மேலும் சிறுநீர் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மட்டனில் அதிக புரோட்டீன் இருப்பதால் குழந்தைகள் அதிகம் சாப்பிடக்கூடாது .
கொடிய நோய்
மேலும் அதிக காய்ச்சல், ஃபைல்ஸ், பல்வலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும் மட்டன் அதிகம் சாப்பிட வேண்டாம். கல்லீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டன் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மட்டனில் உள்ள அதிக ப்ரோடீன் ஆனது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் மட்டனில் உள்ள தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் இயற்கையான இன்சுலின் வெளியீட்டைத் தடுக்கின்றன . உடல் கொழுப்புக்கு இறைச்சி அவசியம், ஆனால் அதை வரம்பிற்கு மேல் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.