இராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா ?முழு விவரம் இதோ!

Tamil nadu Ramanathapuram
By Vidhya Senthil Jan 21, 2025 03:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in கட்டுரை
Report

 இராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் யார் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இராமநாதபுரம்

1910 ஆம் ஆண்டு மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து இராமநாதபுர மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்டுள்ளது.

இராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்

மொத்த மக்கள் தொகை 13,53,445 ஆகும். இதில் ஆண்கள6,82,658 பேரும், பெண்கள் பெண்கள் 6,70,787 உள்ளனர்.ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த விஷ்னு சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாவட்ட ஆட்சியராக 22-07-2024  அன்று  திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் நியமிக்கப்பட்டார்.

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி உள்ளார்.மேலும் சென்னை மாநகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும்,மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் பணியாற்றி உள்ளார்.

மாவட்ட ஆட்சியர்

தற்பொழுது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் ,விவசாயிகள் பிரச்சனை, இலவச மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் , மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குதல் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்,

இராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவிதொகை திட்டம் என தமிழக அரசு கொண்டு வந்த அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மாதம் மாதம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகளை கேட்டறிந்து உதவிகளை வழங்கி வருகிறார்.