நீல நிற ஆதார் அட்டை பற்றி தெரியுமா..? இவர்களுக்கு மிகவும் முக்கியம் -முழு விவரம் இதோ..!
நீல நிற ஆதார் அட்டையின் பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நீல நிற ஆதார்
இந்தியாவில் ஆதார் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிக் கணக்கை திறப்பது, கடன்களுக்கு விண்ணப்பிப்பது மற்றும் அரசு மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை முக்கிய அங்கமாக உள்ளது.
வழக்கமான ஆதார் அட்டையுடன் நீல நிற ஆதார் அட்டையும் (Blue Aadhaar Card) உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?. நீல நிற ஆதார் அட்டை யாருக்கு வழங்கப்படுகிறது என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI)நீல ஆதார் அட்டைவழங்கப்படுகிறது.
இதில் 12 இலக்க தனித்துவமான எண் கொண்டிருக்கும்.நீல நிற ஆதார் அட்டை என்பது 5 வயது அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த ஆதார் அட்டை 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதாவது குழந்தைகளுக்கு 5 வயதைக் கடந்தால் இதனைப் பயன்படுத்த முடியாது.
பயன்கள்
குழந்தை பிறக்கும் போது பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை மூலம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் ஆன்லைன் நீல ஆதார் அட்டையைப் பெற வேண்டுமென்றால் UIDAI வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
பெற்றோரின் ஆதார் அட்டை, முகவரிச் சான்று மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 60 நாட்களுக்குப் பிறகு ஆதார் அட்டை வழங்கப்படும்.இந்த ஆதார் அட்டையில் குழந்தையின் புகைப்படம் மட்டுமே இருக்கும்.