உங்களுக்கு தொண்டை வலி இருக்கா? அப்போ இன்புளுயன்சா பாதிப்பு ஏற்படலாம் - உஷார்..!

Influenza
By Thahir Mar 16, 2023 10:09 AM GMT
Report

உங்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருந்தால் எந்த மாதிரி அறிகுறிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்கள் ,மகப்பேறு பெண்கள் ,சுவாச நோய் பாதிப்புகள் உள்ள குழந்தைகள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

அண்மை காலமாக நாடு முழுவதும் காய்ச்சல் ,சளி ,இருமல் பாதிப்பு தீவிரமாக பரவிவருகிறது . பருவகால காய்ச்சல் என்றாலும் கூட , ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒருவரத்துக்கு மேலாக சளி ,இருமல் ,உடல் சோர்வு நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர் .

இன்புளுயன்சா காய்ச்சல்  

தமிழ்நாட்டில் பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது .

Do you have a sore throat?

நோயின் தீவிரத்தைப் பொறுத்து மூன்று வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

அறிகுறிகள்

அதிக காய்ச்சல் ,ஒழுகும் மூக்கு ,தொண்டை வலி , தசைவலி ,இருமல் ,சோர்வாக உணர்தல் ,போன்றவை இந்த நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும் , வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னரே இது போன்ற அறிகுறைகள் தென்படும் .

Do you have a sore throat?

வழிகாட்டு நெறிமுறைகள்

லேசான காய்ச்சல் ,இருமல் ,தொண்டைவலி உள்ளவர்கள் ,தங்களை வீட்டுலேயே தனிமைப்படுத்தி கொண்டால் போதுமானது எனவும் ,முதியவர்கள் குழந்தைகள் ,கர்ப்பிணிகள் ,இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையுடன் ஓசல்டாமிவிர் மருந்துகளை உட்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பு முறைகள்

மூச்சு விடுவதில் சிரமம் ,நெஞ்சுவலி ,சளியில் ரத்தம் வருதல் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது .

மருத்துவர்கள் ,மருத்துவ பணியாளர்கள் ,பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம்.

மருத்துவத் துறையினர் மற்றும் கர்ப்பிணிகள் ,சுவாச நோய்ப் பாதிப்புள்ள குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டு என கூறப்பட்டுள்ளது .