சுகர் அதிகமாகிவிட்டதா.. இந்த 3 விஷயத்தை செய்தால் போதும் சட்டேன்று குறைந்துவிடும்!
சுகர் ரத்ததில் சுகர் லெவல் குறைக்க இந்த மூன்று இலைகளை சாப்பிட்டால் போதும் கூறப்படுகிறது.
சுகர்
நமது வாழ்க்கை நவீன உலகில் வெகுவாக மாறி விட்டது. உடல் உழைப்பு இல்லாமல் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. உடல் பருமன் சர்க்கரை நோய்க்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.
சர்க்கரை நோய் என்பது பரம்பரையாகவும் ஏற்படக்கூடியது. அதே போல உணவு பழக்கம் என்பதும் ஆரோக்கியமான உணவுகளை விடுத்தது சுவையான உணவுகளை நோக்கிய உணவு முறையாக மாறி விட்டது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகளை பின்பற்றுவதுதான் சிறந்தது.
மேலும், சமசீரான உணவுகளையும், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில், NCBI-ன் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 விஷயம்
நீரிழிவு நோயால் இதயம், இரத்த அழுத்தம், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சுமார் 8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
மதிப்பீடுகளின்படி, 2045 ஆம் ஆண்டில், இந்தியாவில் 13 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சூழலில், சமீபத்திய ஆய்வின்படி சில மருத்துவ குணங்கள் கொண்ட இலைகளை மென்று சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கற்றாழை இலைகள்
கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமான செடியாக கருதப்படுகிறது. கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதாகவும்,
இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் எனவும் கண்டறிந்துள்ளனர். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தானாகவே கட்டுப்படுத்தும்.
சீதாப்பழம் இலைகள்
சீதாப்பழம் மிகவும் சுவையான ஒரு பழமாகும். அந்த வகையில், சீதாப்பழ இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருக்கிறதாம்.
சீதா இலைகள் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனுடன் இரத்த சர்க்கரையையும் குறைக்கிறது.
வேப்பிலை
வேப்பிலை பொதுவாக பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால் வேப்பிலை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும்.
காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.