வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ரஹானே - புஜாரா : பெரும் எதிர்பார்ப்பில் கிரிக்கெட் உலகம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே - புஜாரா ஜோடி ரன் குவிக்க போராட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன்களும், ரஹானே 11 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இப்போட்டியை பொறுத்தவரை புஜாரா- ரஹானே ஜோடிக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாகும். ஏனெனில் நீண்ட காலமாக பார்ம் இன்றி இருவரும் தவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் இந்திய அணியின் தூணாக நின்று பல வெற்றிகளை தந்தவர்கள் என்ற காரணத்திற்காக தான் இன்னமும் அவர்கள் மீது தேர்வர்கள் குழு ஓரளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளது.
ஆனால் அந்த நம்பிக்கையை இந்த ஜோடி உடைத்து வருகிறது. இன்னும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே பாக்கி என்பதை மனதில் கொண்டு புஜாரா- ரஹானே ஜோடி ரன் குவிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.