தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ .. தள்ளிநில் இந்தியே : கவிஞர் வைரமுத்து

Vairamuthu
By Irumporai Jan 25, 2023 05:50 AM GMT
Report

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மொழிப்போர் தியாகிகள் தினம்

 தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்.

தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ .. தள்ளிநில் இந்தியே : கவிஞர் வைரமுத்து | Do Not Touch Tamil Vairamuthu Tweet

 தள்ளிநில் இந்தியே

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தனது ட்விட்டர் பதிவில் மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.

கண்ணகிமதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான் தேகங்கள் அணைந்துவிட்டன. தீ அப்படியே செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே என பதிவிட்டுள்ளார்.