ஏழைகளின் உணவை திருடாதீர்கள்: மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு
உணவை வீணாக்குவது ஏழைகளிடம் இருந்து திருடுவதற்கு சமம்,என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இன்ஸ்டகிராம் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பொது விநியோகம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு நடத்தும் தானிய கிடங்குகளில் சேமிக்கப்பட்ட ரூ406 கோடி மதிப்புள்ள தானியங்கள் சேதமாகி வீணாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய அரசு வீணடிக்கிறது GOIwastesஎன்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி , நாடாளுமன்ற நிலைக்குழு புள்ளி விவரங்கள்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட தானியங்கள் சேதமடைந்ததால், ரூ406 கோடி மதிப்புள்ள தானியங்களை இந்தியா இழந்துள்ளது. உணவை வீணாக்குவது ஏழைகளிடம் இருந்து திருடுவதற்கு சமம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்