எச்சில் தொட்டு பார்சல் பேப்பர்களை பிரிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

Tn government Chennai highcourt Parcel papers
By Petchi Avudaiappan Jun 08, 2021 01:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது, பேப்பர்களை பிரிக்க எச்சிலை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் எச்சிலை தொட்டு பார்சல் பேப்பர்களை எடுப்பதாலும், கவர்களை திறக்க ஊதவும் செய்வதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் நல் ஆலோசனைக்குப் பாராட்டு தெரிவித்தோடு, உணவக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.