ஊடக விவாதங்கள்: தவெகவினருக்கு கட்டுப்பாடு

Thamizhaga Vetri Kazhagam
By Fathima Feb 26, 2026 05:48 AM GMT
Report

கட்சி அனுமதியின்றி தவெக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்க கூடாது என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

தலைமை கழகத்தின் அனுமதியின்றி கழக மாநில மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்ககூடாது.

பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடி பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து தலைமை கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாக பெறவேண்டும்.

முன்அனுமதி பெறாமல் எந்தவிதமான மாநில மற்றும் தேசிய ஊடக தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக விவாதங்கள்: தவெகவினருக்கு கட்டுப்பாடு | Do Not Participate In Meeting Tvk Bussy Anand