இவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை- நன்றி கூறிய பத்திரிக்கையாளர் சங்கம்
மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் ,ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய ,மாநில அரசுப் பணியாளர்கள், தலைமைச் செயலாளர்கள், ஆகியோர் பயணிக்க அடையாள அட்டை போதுமானது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில்: பணி நிமித்தமாக மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் ,ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய ,மாநில அரசுப் பணியாளர்கள், தலைமைச் செயலாளர்கள், ஆகியோர்வாகன தணிக்கை இடங்களில் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இவர்களுக்கு இபதிவு கட்டாயமில்லை. இவர்கள் அனைவரும் அனைவரும் தங்களது அடையாள அட்டையில் எளிதில் பார்க்கும் வண்ணம் வெளிப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.