தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் - அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை..!
திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்குவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும்.புதிய அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் தினம்தோறும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இன்றைய கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தால் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்;
எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும், தலைமையும் நன்கறியும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அன்புக்கு நன்றி! pic.twitter.com/S7v63JDaKb
— Udhay (@Udhaystalin) May 30, 2022