முதல்வரை நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

mkstalin chennaihighcourt
By Irumporai Sep 17, 2021 12:47 PM GMT
Report

அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வரை நிர்ப்பந்திக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் 17 அவதூறு வழக்குகள் மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வரை நிர்ப்பந்திக்கக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரும் முதலமைச்சரின் மனுக்கள் , ஆகஸ்ட் 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.