அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது - பாஜக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் தடை

V. Senthil Balaji Tamil nadu DMK BJP Madras High Court
By Thahir Nov 17, 2022 09:03 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க பாஜக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் 29-ஆம் தேதிக்குள் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது.

மதுபான கொள்முதல் தொடர்பாக சமூகவலைத்தில் நிர்மல்குமார் விமர்சித்திருந்தார் என கூறப்படுகிறது. எனவே, பாஜக நிர்வாகி நிர்மல் குமார் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது.

do-not-comment-on-senthil-balaji-high-court-ban

சென்னை உயர் நீதிமன்றம் தடை

இதுதொடர்பாக ஏற்கனவே வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பட்டிருந்த நிலையில், அதற்கு முறையான விளக்கம் அளிக்கவில்லை.

இதனால், நிர்மல் குமார் தனது குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க பாஜக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.