‘’ பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

ministersubramaniyan celebratenewyear
By Irumporai Dec 28, 2021 07:56 AM GMT
Report

புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு விட்டது.

மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் இன்று மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவப் பிரிவு 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று 100க்கும் கீழ் உள்ளது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 100க்கும் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஓமிக்ரான் சமூகப் பரவலாக மாறி உள்ளதாக கூறினார்.

மேலும், சென்னையில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அத்துடன் சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கமும் குறைந்துள்ளது.

சென்னையில் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்