சாதராண வீரராக இருக்கேன் எனக்கு கேப்டன் பதவியெல்லாம் வேண்டாம்!-சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான்
பிரபல சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான், தனக்கு கொடுக்க இருந்த கேப்டன் பொறுப்பை மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான். ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
தனது பந்து வீச்சின் மூலம் திறமையான பேட்ஸ்மேன்களையும் திணற வைக்கும் ரஷித் கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பதவியை அன்பாக மறுத்திருக்கிறார் ரஷித் கான்.
தற்போது ரஷித் கான்,மன உளைச்சலில் இருப்பதாகவும் கேப்டன் பொறுப்பு வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கேப்டன் பொறுப்பு என் செயல்திறனை பாதிக்கும் ஆகவே அணியில் ஒரு வீரராக இருக்கவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.