இந்திய அணியை உலக கோப்பையை அடிக்க விடக்கூடாது...தோற்கடிக்க இதை செய்யுங்கள் - கில்கிறிஸ்ட்
இந்திய அணியை உலக கோப்பையை அடிக்க விடக்கூடாது..தோற்கடிக்க இதை செய்யுங்கள் என்றும் தனது ஆலோசனையை முன்னாள் கிரிக்கெட் வீரரான கில்கிறிஸ்ட் வழங்கியுள்ளார்.
இந்திய அணி 8 போட்டியிலும் வெற்றி
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கிய இந்திய அணி, தனது அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா என அனைத்து அணிகளையும் மிக இலகுவாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டியிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.
இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது கிரிக்கெட் உலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் வெற்றி பயணம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் வெற்றி பயணம் குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட், இந்திய அணியை வீழ்த்துவதற்கு தேவையான தனது ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.
இந்திய அசுர பலம் கொண்டுள்ளது
இது குறித்து பேசிய ஆடம் கில்கிறிஸ்ட், “இந்திய அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது. குறிப்பாக இந்திய அணி பந்துவீச்சில் அசுர பலம் கொண்ட அணியாக உள்ளது.
முகமது ஷமி மற்றும் முகமது சிராஜின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிக கடினம். ஆனால் இந்திய அணியுடனான போட்டியில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது மற்ற அணிகளுக்கு சாதகமாக அமையும்.
இரவு நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வதை விட பகல் நேரத்தில் எதிர்கொள்வது இலகுவாக இருக்கும். மற்ற அணிகளை நான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய சொல்வதால் இந்திய அணி சேஸிங்கில் பலவீனமான அணி என அர்த்தம் இல்லை.
சேஸிங்கில் விராட் கோலி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். இரவு நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினம் என்பதால் தான் இதை கூறுகிறேன்.
இரவு நேரம் என்றால் லைட்டின் வெளிச்சத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச ஓடி வருவதை பார்ப்பதே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்தார்.