திமுகவின் போலி சமூக நீதி நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது : அண்ணாமலை

BJP K. Annamalai
By Irumporai Dec 26, 2022 01:12 PM GMT
Report

மேடைகளில் சமூக நீதி நாடகம் அரங்கேற்றுவது திமுகவின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

மாநிலம் முழுவதும் உள்ள. ஈமூகத்தில் பின் தாங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர். ஒவ்வொரு வருடமும், எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன். பட்டப்படிப்பிற்காகவும், பட்ட மேற்படிப்பிற்காகவும், தநைகர் சென்னைக்கு வருகிறார்கள்.

திமுகவின் போலி சமூக நீதி நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது : அண்ணாமலை | Dmks Drama Has Come To Light Annamalai

தமிழக அரசின் ஆதி திராவிட நலத் துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

சமூக நீதி நாடகம்

மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை. தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள் மாணவர்கள்.

இது மட்டும் அல்லாது. மாணவர்களுக்கு, மாதாமாதம் இதர செலவாக வழங்கப்பட வேண்டிய 150 ரூபாயும் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எதுவும் இல்லை. என்றும் மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் மேடைகளில் சமூக நீதி நாடகம் அரங்கேற்றுவது திமுகவின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது.

எனவே, தமிழக அரசு. ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, உடனடியாக மீண்டும் அத்துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படைத் தேவைகளையும், பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் கல்வி வேலைவாய்ப்பு, நூலகம் உள்ளிட்ட இதர நலப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்த அறிக்கையின் வாயிலாக வற்புறுத்துகிறோம்.’ என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.