இந்தி திணிப்பை எதிர்த்து சென்னையில் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
புதிய கல்வி கொள்கை
மத்திய அரசு அமல்படுத்திய புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியதோடு இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் என்றுதமிழகதமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

உதயநிதி
அந்தவகையில், இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர