எந்த கொம்பனாலும் திமுகவை தொட முடியாது: முதல்வர் ஸ்டாலின்
திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா, போராடி மாநிலத்திற்கு அதிகாரங்களை பெற்றோம், இந்தியாவில் முதலில் மாநில கட்சி ஆட்சியை பிடித்தது திமுக, தற்போது மாநில கட்சிகள் இருக்கக்கூடாது என பாஜக செயல்படுகிறது, அவர்களால் தொட முடியாத மாநிலம் தமிழகம்.
அடிமைகளும், துரோகிகளும், எதிரிகளும் சேர்ந்து மாநிலத்தின் சுயமரியாதையை அடகுவைக்க பார்க்கிறார்கள், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறோம், இதில் சந்தேகம் இல்லை. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது, தமிழ்நாடு தான் டாப், இந்த முறை அவர்கள் பட்ஜெட்டில் கொடுத்தது‘ஜீரோ’, நாமும் தேர்தலில் அவர்களுக்கு அதே ‘ஜீரோ’ தானே கொடுக்க வேண்டும்
முதல் இணைப்பு
விருதுநகரில் திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் வேலைகளில் திமுக மும்முரம் காட்டி வருகிறது.
கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் திமுக சாதனைகளை விளக்கும் விதமாக மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.
மாலை 3 மணியளவில் தொடங்கும் இம்மாநாட்டில், 20 திமுக அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகியுள்ளன, இதில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
