விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு

Udhayanidhi Stalin
By Fathima Feb 07, 2026 03:30 AM GMT
Report

விருதுநகரில் திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் வேலைகளில் திமுக மும்முரம் காட்டி வருகிறது.

கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் திமுக சாதனைகளை விளக்கும் விதமாக மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

கமல்ஹாசனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

கமல்ஹாசனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்


அந்த வகையில் இன்று விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.

மாலை 3 மணியளவில் தொடங்கும் இம்மாநாட்டில், 20 திமுக அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகியுள்ளன, இதில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு | Dmk Youth Wing Conference In Virudhunagar