ஏழு தமிழர் விடுதலையை திமுக சாத்தியப்படுத்துமா?
DMK
BJP
ADMK
Stalin
Ezhuvar
By mohanelango
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் எழுவர் விடுதலை விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. எழுவரையும் தமிழக அரசே தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக விடுதலை செய்யலாம் என வலுவான குரல்கள் எழுந்துள்ளன.
எழுவர் விடுதலையில் உள்ள சிக்கல், அதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் ஐபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார்.