திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்தச் சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது - மு.க.ஸ்டாலின் உறுதி

DMK Tamil Nadu Stalin Sterlite
By mohanelango Apr 26, 2021 09:18 AM GMT
Report

தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி அளித்துள்ளது.

இதற்கு திமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவித்திருந்தன. திமுக சார்பில் எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திமுக ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழத் தொடங்கின. அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், ”மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக #Sterlite ஆலையை திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான்.

திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”