‘‘மதுரையில் திமுக வெற்றி பெற்றது .. எங்களது வளர்ச்சித் திட்டங்களால்தான்’’ - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.
அதில், கிராமப்புற மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அம்மா மினி கிளினிக்குள் தற்போது நிறுத்தபட்டிருப்பதாக கூறியிருந்தனர்,
இதற்கி பதிலளித்த தமிழக வணிக வரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசை குறை கூறுவதை விட்டு விட்டு, முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனைக் கூறினால் நல்லது என கூறினார்.
இந்த நிலையில், இன்று மதுரை திருமங்கலத்தில் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேரிடர் காலங்களில் மக்கள் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது எதிர்க்கட்சிகளின் பிரதான கடமை.

ஆகவே, எங்களது கோரிக்கைகளில் கடுகளவும் உள்நோக்கம் கிடையாது என கூறினார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில், 10 தொகுதிகளிலும் வளர்ச்சிகளை உள்ளடக்கி அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டதால் தான், ஆளுங்கட்சியினர் முன் வைத்தக் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுகவிற்கு வெற்றியைத் தந்தார்கள்.
ஆனால் பாரபட்சமாக திட்டங்களில் செயல்பட்டதாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி ஆச்சர்யமாக உள்ளது.
பொதுவாழ்வில் நீண்ட நெடிய அனுபவம் பெற்ற மாண்புமிகு வணிக வரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றது அதிமுக ஆட்சியில் அவரது மதுரை கிழக்கு தொகுதிக்கு நாங்கள் செய்த வளர்ச்சித் திட்டங்களால்தான்என்று கூறிய அமைச்சர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி, அம்மா மினி கிளினிக்குகளை திறந்து அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறினார்.