முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக
முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கை திமுக திரும்ப பெற்றது.
கரூர் செல்லும் முதல்வர் விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விஜய் முதல்வராவதற்கு முன்னர் டெல்லி சென்று வழக்கு விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வந்தார்.
இந்நிலையில் வரும் ஜூலை 10 ஆம் திகதி முதல்வர் விஜய், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

இதனிடையே, "கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விட மாட்டோம். எங்கள் தலைவர் மீது கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையானது.
வழக்கை திரும்ப பெற்ற திமுக
இதனையடுத்து, முதல்வர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதால் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும், கரூர் விவகாரம் குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதி, "இந்த மனு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், முதலமைச்சர் விஜயை குற்றம்சாட்டப்பட்ட நபர் என திமுக வழக்கறிஞர் கூறியதற்கு, முந்தைய அரசில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை, எப்படி முதல்வரை குற்றம்சாட்டப்பட்ட நபர் என குறிப்பிடுகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? உங்களுடைய சண்டைகளை வெளியே வைத்துக் கொள்ளுங்கள்; உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வழக்கு தொடர்பாக சில கருத்துகளை அமைச்சர்களோ, முதலமைச்சரோ தெரிவித்தால் அதற்கு அவமதிப்பு வழக்குதானே தொடர முடியும்? என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கரூர் வழக்கை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவிடம் இது குறித்து புகார் அளிக்க உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதை திமுக மனுவை திரும்பப் பெற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் : உயிரிழந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு IBC Tamil
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil