தபால் வாக்குகளில் திமுக முன்னிலை: Live முடிவுகள்

admk dmk
By Fathima May 02, 2021 03:14 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளன, முதலில் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றுகளிலும் 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.  

தற்போதைய நிலவரப்படி 14 தொகுதிகளில் திமுகவும், 3 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகின்றன.

இதன் விபரம்,

வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா முன்னிலை

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக முன்னிலை

ஆண்டிப்பட்டி தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக முன்னிலை

திருவண்ணாமலை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை

விருகம்பாக்கம் தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலை

அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை

சைதாப்பேட்டை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை 

 தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மெய்யநாதன் முன்னிலை

முசிறி தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை

ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமசந்திரன் முன்னிலை 

அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் முன்னிலை

தி.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை