பெரும்பான்மையான நகராட்சிகளை மொத்தமாக கைப்பற்றும் திமுக
kovaivalparaidmkwon2022
tnurbanelections
dmkleading
By Swetha Subash
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.
21 மாநகராட்சி , 489 பேரூராட்சி மற்றும் 138 நகராட்சிகளில் காலை 10 மணி நிலவரப்படி திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வாள்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 19 இடங்களை கைப்பற்றியது திமுக, அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி.