25 ஆண்டுகளுக்கு பின் வெற்றி வாகை சூடிய திமுக
By Fathima
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கோயம்புத்தூரின் பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது திவான்சாபுதூர் ஊராட்சி.
இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இங்கு கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளரே வென்று ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட, கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு ஆதரவாக மநீம-இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர்.மகேந்திரன் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan
