சென்னையில் மொத்த தொகுதிகளை கைப்பற்றுகிறதா திமுக?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு தேவையான 117-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதியில் ஏப்ரல் 6ம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 72.78 சதவித வாக்குகள் பதிவானது. இன்று மே 2 வாக்கு எண்ணிகை தொடங்கி சுற்று வாரியாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 229 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில் திமுக கூட்டணி 136 தொகுதிகளில் முன்னிலைப்பெற்றுள்ளது. இது வெற்றிக்கு தேவையான 117 தொகுதிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக-வுக்கு அடுத்தபடியாக அதிமுக 92 தொகுதிகளிலும், மநீம 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின முன்னிலைப்பெற்றுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.