ட்விட்டரிலும் போஸ்டரிலும் யுத்தம் செய்யும் -திமுக - நாம் தமிழர்
ஒரு பக்கம் டுவிட்டர் யுத்தம் நடத்தி வரும் திமுகவினரும் நாம் தமிழர் கட்சியினரும் இன்னொரு பக்கம் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். இதற்கு அடுத்த கட்டமாக நேருக்கு நேர் என்று நாம் தமிழர் கட்சியினர் மேடையேறி அத்தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் திமுகவினர்.
திமுகவுக்கு எதிராக இயங்கி வந்த நாம் தமிழர் கட்சியினர், தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையில் ஏறிய திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டவர்கள், மேடையிலிருந்த மைக்கை பிடுங்கி தூர வீசி நாற்காலியை தூக்கி நாம் தமிழர் கட்சியினர் மீது அடித்திருக்கிறார்கள்.
இதனால் #ரவுடிதிமுக என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள் நாம் தமிழர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொண்டி பேரூர் திமுகவினர் சீமானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டருக்கு பக்கத்திலேயே சீமானைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதற்கு திமுகவினர்ஈழத் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் எச்சக்கல சீமான் வெறி நாயேதிமுக தொண்டர்கள் மனது புண்படும்படி மேடையில் செருப்பை காட்டிய அரசியல் நாகரீகம் தெரியாத சீமான் நாயே உனது போக்கினை இத்துடன் நிறுத்து இல்லையேல் நிறுத்தப்படுவாய். திருந்து.

இல்லையேல் திருத்தப் படுவாய். அடங்கு இல்லையேல் அடக்கப்படுவாய் என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் , ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.