திமுகவுக்கு பயத்தை கொடுத்துட்டோம் ,வெற்றி எங்களுக்குத்தான் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது நாங்கள் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக தோல்வி
அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 43,553 வாக்குகளே கிடைத்தன. அதிமுக வேட்பாளரை 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்
ஜெயக்குமார் விளக்கம்
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை பொறுத்தவரை கட்சி எழுச்சியாகவே உள்ளது.ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் பயந்தன.
இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரை ஆளும் திமுக அரசுக்கு மிகப்பெரிய பயம், எந்த தேர்தலிலும் இதுபோன்று அவர்கள் பயந்ததில்லை, இந்த தேர்தலில் பயந்து தான் 350 கோடி செலவு செய்து போலியான வெற்றி பெற்றுள்ளனர். எனவே, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் எங்களைப் பொறுத்தவரை இது ஒரு தோல்விகரமான வெற்றி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.