என்ன ஒரு ஆணவம்...? கேள்வி கேட்ட பெண் நிருபர் -முகத்தை காட்ட சொன்ன அண்ணாமலை- சீறும் திமுக.!!
கேள்வி கேட்ட பெண் நிருபர் ஒருவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேமரா முன் வரும்படி கூறியதற்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் செயல்
தமிழகத்தில் அதிரடியாக பல சவால்களை பெற்று வரும் பாஜகவின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்து வருகின்றது. அதிமுக பாஜக கூட்டணி முறிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், புது கூட்டணி ஒன்றை அமைக்கும் நெருக்கடியில் பாஜக தள்ளப்பட்டுள்ளது.
கூட்டணி முறிவிற்கு காரணமாக அதிமுக தமிழக பாஜக கட்சி தலைமையை வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, பயணத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், பல தரப்பு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
கண்டித்த திமுக
அப்போது செய்தியாளர் ஒருவர், மாநில தலைவர் பொறுப்பிலிருந்து நீங்கள் மாற்றப்பட்டால், தொடர்ந்து கட்சியில் நீடிப்பார்களா? என்ற கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு சட்டென அண்ணாமலை, சிஸ்டர் இங்க வாங்க..கேமரா முன் வாங்க.. உங்க முகத்தை தமிழக மக்களுக்கு காட்டுங்கள் மக்கள் - பார்க்கட்டும்.. இப்படி கேள்வி கேட்பவர் யார் என்பதை தெரிந்துகொள்ளட்டும் என்றார்.
அண்ணாமலையின் இந்த ரெஸ்பான்ஸ் பெரும் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அதற்கு திமுகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில், என்ன ஒரு ஆணவம்? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியவில்லை, இதில் வெட்டி வியாக்கியானம் வேறு. பாஜக நிர்வாகிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. ஆர்எஸ்எஸ் இவருக்கு என்ன தகுதி என இவரை தலைவராக்கியது?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
என்ன ஒரு ஆணவம்?
— Saravanan Annadurai (@saravofcl) October 1, 2023
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியவில்லை, இதில் வெட்டி வியாக்கியானம் வேறு.
பாஜக நிர்வாகிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
ஆர்எஸ்எஸ் இவருக்கு என்ன தகுதி என இவரை தலைவராக்கியது? https://t.co/1qzBxjkCHz