70வது பிறந்த நாள்; ஒட்டகத்தை முதலமைச்சருக்கு பரிசளிக்க வந்த தொண்டர் - மிரண்டு போன போலீசார்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று பிரமாண்டமாக கொண்டாடுகிறார்.
முதலமைச்சருக்கு பலரும் வாழ்த்து
பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒட்டகத்திற்கு அனுமதி மறுப்பு
இந்நிலையில் திமுக தொண்டர் ஜாகிர்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 2 வயது ஒட்டகத்துடன் வந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜாகிர்ஷா முதல்வருக்கு வழங்கிய பரிசுகளை பட்டியலிட்டு கூறினார். உலகில் இதுவரை யாரும் தராத பரிசாக இந்த ஒட்டகத்தை வழகுவதாக அவர் மேலும் கூறினார். ஆனால் காவல்துறையினர் ஒட்டகத்தை பரிசாக அளிக்க அனுமதி மறுத்துவிட்டனர்.