தமிழகத்தில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க ராணுவத்தை அழைக்கும் நிலை உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

dmk edapadipalanisamy fakevote
By Irumporai Feb 20, 2022 08:49 AM GMT
Report

தமிழக அரசியலில் தற்போது ராணுவத்தை அழைக்கும் நிலைதான் உள்ளதகா எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூாில் செய்தியாளா்களிடம் பேசிய எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி :

நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் திமுக-வினா் தேல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் திமுக-வினா் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை கூட காவல்துறையினா் தடுக்கவில்லை என்றும்  தி.மு.க வேட்பாளரின் கணவர் ஒருவர் போலீசாரை மிரட்டும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருவதாகவும் கூறினார். 

தமிழகத்தில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க ராணுவத்தை அழைக்கும் நிலை உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு | Dmk Vin Registered Fake Votes Edappadi Palanisamy

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி , பொதுமக்கள், அச்சமின்றி வாக்களிக்கும் சூழல் இல்லாத நிலையே தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினா்.  

மேலும், இது போன்ற தேர்தல் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.