திரும்பும் திசையெங்கும் கருப்பு சிவப்பு - மிரளவைத்த மாநாட்டு ஏற்பாடுகள்
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி சார்பில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 1.50 லட்சம் மகளிர் கலந்து கொண்டனர்.
30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கருப்பு – சிவப்பு நிறத்தில் சுடிதாரும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதே நிறத்தில் சேலையும் கொடுக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த வாகனத்திற்கு முன்பு படை வீரர்கள் போல் இரு சக்கர வாகனங்களில் பெண்கள் அணிவகுத்து வந்தனர்.
தொடர்ந்து கருப்பு சிவப்பு கொடிகளுக்கு மத்தியில் மு.க. ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 35 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மகளிரணி உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

12,380 வாக்குச்சாவடிகளில் இருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 15 பேர் வீதம், சுமார் ஒன்றரை லட்சம் பேர் கூடினர். இவர்களுக்கு குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறைகள், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் மாநாட்டு வளாகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து இருக்கைகளிலும் 9 வகையான உணவு பொருட்கள் அடங்கிய பை வைக்கப்பட்டது. மாநாடு தொடக்கம் முதலே திட்டமிட்ட முறையில் வெகுவிமர்சையாக பாதுகாப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டம் தற்போதைய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதனைத் தொடர்ந்து வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
அம்மன் சிலையை தூக்கி எறிந்த பிக்குவிற்கு நடந்த சம்பவம் : திருகோணமலையில் அம்மனின் அமானுஸ்யம் IBC Tamil