சினிமாவா..அரசியலா?: விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின்

cinema politics answer uthanithi about
By Praveen May 04, 2021 01:05 PM GMT
Report

 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது தந்தை முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது.  இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே விரைவில் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அதேபோல், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், நடிகர் உதயநிதியிடம் இனிமேல் நீங்கள் அரசியலா? சினிமாவா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,

சினிமா வேறு, அரசியல் வேறு நான் ஒப்புக்கொண்டு உள்ள 3 படங்களில் இன்னும் நடிக்க வேண்டியுள்ளது. மேலும் மக்கள் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வைத்துள்ளதால் ஒழுங்காக தொகுதி பணியை மேற்கொள்ளுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறித்தியதாகவும் அவர் தெரிவித்தார்.