மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

M K Stalin Tamil nadu DMK Chennai
By Sumathi Jul 17, 2022 02:44 AM GMT
Report

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் | Dmk Under The Mkstalin A Meeting Of Mlas

இதுகுறித்து அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூலை-18 அன்று நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து

குடியரசுத் தலைவர் தேர்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை , அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்" நடைபெறும்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் | Dmk Under The Mkstalin A Meeting Of Mlas

அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

யஸ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு குறித்து கடந்த மாதம் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. திமுகவுக்கு 133 எம்எல்ஏக்கள், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் மொத்தம் 34 எம்பிக்கள் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.