திருச்சியில் இன்று திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு

M K Stalin DMK
By Fathima Mar 09, 2026 03:38 AM GMT
Report

திருச்சியின் சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இம்மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்துகிறார், தேர்தல் வரவிருப்பதால் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா். பாலு ஆகியோா் சிறப்புரை நிகழ்த்துகின்றனா்.

இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்துள்ளார் அமைச்சர் கே.என். நேரு.

திருச்சியில் இன்று திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு | Dmk Trichy Meeting

இன்று பிற்பகல் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு நடைபெற உள்ளது.

மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடி கம்பத்தில் முக ஸ்டாலின் திமுக கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.  

இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி, இன்று முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.