டி.ஆர்.பாலு எம்.பி.யின் மூத்த சகோதரி மறைவு - அரசியல் கட்சியினர் அஞ்சலி
டி.ஆர்.பாலு எம்.பி.யின் மூத்த சகோதரி உடல்நலக் குறைவினால் காலமானார்.
டி.ஆர்.பாலு எம்.பி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுஎம்.பி.யின் மூத்த சகோதரியும், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளராக இருந்தவருமான செங்குட்டுவன் மனைவி பவுனம்மாள் (87) காலமானார்.
டி.ஆர்.பாலுவிற்கு இறந்த பவுனம்மாளையும் சேர்த்து மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். ஏற்கனவே மூன்றில் இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் காலமாகி விட்டனர். இந்நிலையில் மூத்த சகோதரி உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக டி.ஆர்.பாலுவின் இல்லத்தில் இருந்து வந்தார்.
சகோதரி மறைவு
உயிரிழந்த அவரது சகோதரிக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி சடங்கு மன்னார்குடி அடுத்த டி.ஆர்.பாலுவின் சொந்த ஊரான தளிக்கோட்டையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.