முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரன் காலமானார்!
முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடைதுறை அமைச்சராக பொறுப்பு வகித்த தாமோதரன் இன்று காலமானார். கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி உடல்நலக் குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாமோதரன் இன்று உயிரிழந்தார்.
நாளை அவரது உடல் பி.எஸ்.ஜி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.