சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை - உதயநிதி விளக்கம்!

udyanidhi sasikala
By Jon Jan 13, 2021 11:50 AM GMT
Report

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்புடன் தயாராகி வருகின்றன. அவ்வாறு 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு அங்கமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.

எனவே உதயநிதி ஸ்டாலின், பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து உதயநிதிக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில் சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், பொள்ளாச்சி பெண்களுக்காக போராடாத அதிமுக என்னை கண்டித்து போராடுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.