“வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை திமுக காக்கும்” : முதலமைச்சர் ஸ்டாலின்

mkstalin cmstalin dmkstalin
By Swetha Subash Mar 06, 2022 10:59 AM GMT
Report

தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின்  தனது ட்விட்டர் பக்கத்தில்:

“தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று,எத்தனை சோதனைகள் ,அடக்குமுறைகள்  அவதூறுகள், அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்.

இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும்,அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்”,என்று தெரிவித்துள்ளார்.