7 முறை வெற்றி பெற்ற காட்பாடியில் துரைமுருகன் பின்னடைவு
7 முறை வெற்றி பெற்ற காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, வெற்றி பெறுவார்கள் என உறுதியாக கூறப்பட்ட அரசியல் பிரபலங்கள் கடும் பின்னடையை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக சார்பில் வி.ராமு போட்டியிட்டனர்.
நான்கு சுற்றுகளின் முடிவில், அதிமுக வேட்பாளர் ராமு 16, 497 வாக்குகளும், திமுக வேட்பாளர் துரைமுருகன் 11,977 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சுமார் 4520 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலையில் இருக்கிறார், கடந்த நான்கு சுற்றிகளிலும் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவையே சந்தித்து வருகிறார்.
11 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட துரைமுருகன், 9 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளார். இம்முறை 10-வது முறையாக இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.