சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான சூப்பரான பரப்புரை திட்டங்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் களமிறங்க உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
பிரதான எதிர்கட்சியான அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தையும் நேற்று தொடங்கிவிட்டார்.

ஆளும் கட்சியான திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதனால் திமுக-வின் தேர்தல் பிரசாரம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சாரத்தை தொடங்கும் மு.க ஸ்டாலின்
தகவலின் படி, ஏப்ரல் 2ம் திகதி முதல் க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க ஸ்டாலின் தன்னுடைய பிரசாரத்தை தொடங்குகிறார்.

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இறுதியாக ஏப்ரல் 21ம் திகதி தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
மேலும் ஏப்ரல் 6ம் திகதி முதல்வர் மு.க ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளையான கூறியதால் ரவிராஜை கொன்ற சம்பத் மனம்பேரி! மீண்டும் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு IBC Tamil
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan